அரச சேவையில் பதவி நிலை உத்தியோகத்தர்கள் விடுமுறை நாட்களில் கடமைபுரிகின்ற சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு வழங்கப்படுவதே விடுமுறை நாட் கொடுப்பனவாகும்.
இக்கொடுப்பனவானது அவர்கள் பெறுகின்ற மாதாந்த அடிப்படை வேதனத்தினை 20 ஆல் வகுத்துப் பெறப்படுகின்ற தொகையினை அவர்கள் கடமையாற்றிய விடுமுறை நாட்களினால் பெருக்கும்போது கிடைக்கப் பெறுவதே அக்குறித்த மாதத்திற்கான விடுமுறை நாட் கொடுப்பனவாகும்.
ஆனால் குறித்த பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஒரு விடுமுறை நாளில் கட்டாயம் 8 மணித்தியாலங்கள் கடமையாற்றுதல் வேண்டும்.